Death penalty 22
இலங்கை

எட்டுப் பேருக்கு மரண தண்டனை – கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

Share

எட்டு பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கடந்த 1997ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பான வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட 08 பிரதிவாதிகளுக்கு இந்த தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், இன்றைய தினம் இந்த தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பிரதிவாதிகள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில், மற்றொரு பிரதிவாதி இல்லாமல் விசாரணையை நடத்த நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.

Sentenced Seven People To Death

பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால், 1997 ஆம் ஆண்டு கொழும்பு நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியில் கொலை மற்றும் பலரை காயப்படுத்தியதற்காக, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய, அரச தரப்பால் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நீண்ட விசாரணைக்கு பின்னர், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...