நடிகர் சூர்யாவின் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் கருப்பு.
அதன் பின்னர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வெளியாகும் தருவாயிலுள்ளது. அத்தோடு இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கிவரும் சூர்யா 47 படமும் தயாராகி வருகிறது.
சூர்யா தனது 48வது படத்தில் இயக்குனர் த.செ.ஞானவேலுடன் இணையவிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகின்றது. இப்படத்தை பிரபல நிறுவனம் ஒன்று தயாரிக்கவிருக்கின்றது.
கருப்பு துரைப்படமானது ரூ. 130 முதல் ரூ. 140 கோடி வரையிலான பட்ஜெட்டில் வெளியானதுடன் ரூ. 340 கோடி வரையிலான வசூல் வேட்டை நடத்தி இருந்தது.
இதன் காரணமாக, சூர்யாவின் அடுத்த படத்திற்கான ஊதியம் ரூ. 100 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்க படுகின்றது.