gna
செய்திகள்அரசியல்இலங்கை

ஒரே நாடு ஒரே சட்டம் – பொதுமக்களின் கருத்துக்களையும் உள்வாங்க தீர்மானம்

Share

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியில் பொதுமக்களின் கருத்துக்களையும் உள்வாங்க தீர்மானித்துள்ளதாக செயலணியின் தலைவர் வண. கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறியும் இச் சந்தர்ப்பத்தில், பொதுமக்களின் கருத்துக்களையும் உள்வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து யோசனைகள், ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன எனவும் தேரர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் தமது கருத்துக்களை ocol.consultations@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி, செயலாளர், தபால் பெட்டி- 504, கொழும்பு என்ற முகவரிக்கோ எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் அனுப்பலாமென்றும் அவர் குறிப்பிட்டார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...