7 13
இலங்கைசெய்திகள்

1990 அம்புலன்ஸ் சேவைக்கு புதிய நிறம்.. சபையில் கடும் எதிர்ப்பு!

Share

1990 – சுகப்படுத்தும் அம்புலன்ஸ் சேவையின் நிறத்தை தேசிய மக்கள் சக்தி கட்சியின் நிறத்தை போல மாற்றியதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய(09.10.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இந்த 1990 – சுகப்படுத்தும் அம்புலன்ஸ் சேவை, நாட்டு மக்கள் மிகவும் விரும்பும் ஒரு சேவையாகும். அத்துடன், அந்த சேவை நாட்டு மக்களின் நம்பிக்கையையும் மரியாதயையும் பெற்றுள்ளது.

இதன்மூலம், ஒவ்வொரு நாளும் 1050 நோயாளிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இன்றுவரை, நாட்டில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த சேவையின் பெயர், நிறம், அதிகாரப்பூர்வ சின்னம் ஆகியவற்றை தேசிய மக்கள் சக்தியின் கட்சியின் நிறம் மற்றும் வடிவத்திற்கு ஏற்ப மாற்றும் முயற்சி நடந்து வருகின்றது.

இந்த சேவையில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், சட்டத்தில் திருத்தம் செய்யாமல் அவ்வாறு செய்ய வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...