6 13
இலங்கைசெய்திகள்

வசந்த சமரசிங்க மற்றும் அவரது மக்கள் தொடர்பு அதிகாரிக்கு எதிராக தவறான செய்திகள்

Share

அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் அவரது மக்கள் தொடர்பு அதிகாரி நிமோதி விக்ரமசிங்க ஆகியோரை இலக்கு வைத்து சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட தவறான மற்றும் அவதூறான இடுகைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு முறைப்பாடு அளித்துள்ளது.

சமூக வலைதளப் பக்கங்கள் மற்றும் சில இணையத்தளங்கள் புனையப்பட்ட கதைகள், திருத்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளதாக அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்திகள் அமைச்சர் மற்றும் அவரது ஊழியர்களின் தனிப்பட்ட, குடும்ப மற்றும் தொழில்ரீதியான நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதுடன், அவரது அரசியல் நற்பண்புக்கும் களங்கம் விளைவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அவற்றுடன் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களை விசாரித்து, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சு குற்றப்புலனாய்வு திணைக்களத்தை கோரியுள்ளது.

Share
தொடர்புடையது
இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...

bus deesel
இலங்கை

டீசல் இல்லாமல் இயக்கப்படும் பேருந்துகள் !

மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக இயக்கப்படும் பேருந்துகள் மீது காவல்துறை நாடு தழுவிய அளவில் தீவிர நடவடிக்கைகளைத்...

canada job
இலங்கை

கனடா மோகம் – பறிபோன எட்டு மில்லியன் ரூபா.

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் கனடா – லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத்...

police team
இலங்கை

துரிதமாக இடம்பெறும் இரண்டு தனி காவல்துறையினரின் விசாரணை.

மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவும், மாலபே பொலிஸாரும் இணைந்து, முன்னாள் பொலிஸ் மா அதிபர்...