மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவும், மாலபே பொலிஸாரும் இணைந்து, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்பு குறித்து தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மாலபே, தலாஹேன, பராக்கிரம வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்ததைத் தொடர்ந்து, அவர் கொழும்பு கிழக்கு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.
அத்துடன், தற்போதைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அவரது சடலம் கொழும்பு கிழக்கு போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.