செய்திகள்
இத்தாலியில் மோடிக்கு அமோக வரவேற்பு
ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலிக்கு சென்றவேளையில் அவருக்கு அமோக வரவேற்பு வழங்கபட்டுள்ளது.
இத்தாலி நாட்டில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி அவர்கள் நேற்று டெல்லியில் இருந்து இத்தாலிக்கு புறப்பட்டார்.
ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி சர்வதேச பொருளாதார விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இந்திய நேரப்படி 9.30 மணிக்கு அவர் இத்தாலி நாட்டுக்கு சென்றடைந்தார் .
விமான நிலையத்தில் அவருக்கு மிகவும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாலியில் வாழும் இந்தியர்கள் திரண்டு வந்து கைகளில் மூவர்ண கொடி ஏந்தியபடி பிரதமர் மோடியை வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து இந்திய பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரோம் நகரில் தரை இறங்கி உள்ளேன் எனவும் இம் மாநாட்டில் சர்வதேச அளவில் முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படும்.
ரோமில் எனது அடுத்த பயண திட்டங்கள் குறித்தும் ஆர்வமாக உள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தாலியில் இன்றிலிருந்து 31-ந்தேதி வரை 3 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள போகிறார் .
கிறிஸ்தவர்களின் தலைவரான போப் ஆண்டவரையும் வாத்திகனில் பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார்.
அத்தோடு இத்தாலி பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இங்கிலாந்து நாட்டுக்கு செல்கிறார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ்ஜான்சன் அழைப்பை ஏற்று அவர் அங்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
#world
You must be logged in to post a comment Login