fire accident 7878
செய்திகள்இந்தியா

அதிகாலையில் தீ விபத்து-நால்வர் உடல் கருகிப் பலி

Share

இந்தியத் தலைநகர் புது டில்லியில் உள்ள அடுக்குமாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகினர்.

டில்லியின் பழைய சீமாபுரி பகுதியில் 3 மாடிகளை கொண்ட அடுக்குமாடி வீடு உள்ளது.

அடுக்குமாடி வீட்டில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

வீட்டின் 3ஆவது மாடியில் உள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேர் தீவிபத்தில் சிக்கிக்கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு அதிகாலை தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீவிபத்து ஏற்பட்ட வீடு உள்ள பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் வீட்டில் பரவிய தீயை அணைத்தனர்.

தீயணைப்பு வருவதற்கு முன்னர் வீட்டின் 3-வது மாடியில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேரும் தீ விபத்தில் சிக்கி உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த  பொலிஸார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...