world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

Share

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12, 2026) அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். புத்தளம், ஆனமடுவ பகுதியிலிருந்து செங்கற்களை ஏற்றிக்கொண்டு மீரிகம நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறி ஒன்றே இவ்வாறு வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மீரிகம, பல்லேவெல பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய லொறியின் சாரதியும், 42 வயதுடைய அவரது உதவியாளருமே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். அதிகாலை வேளையில் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் தூக்க கலக்கமே லொறி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததற்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.

விபத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் சடலங்கள் மீட்கப்பட்டு, தற்போது கட்டுப்பொத்த பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. பண்டிகைக் காலங்களில் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து கட்டுப்பொத்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...