IMG 20211026 WA0032
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுமந்திரனுக்கு எதிர்ப்பு – குருநகரில் ஹர்த்தால்!

Share

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில், உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்களால் கறுப்புக் கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளூர் இழுவை மடிதொழில் தடை செய்யப்பட வேண்டும் என அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே குருநகர் வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குருநகர் பகுதியில் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

குருநகர் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருவதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவப் பொம்மையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG 20211026 WA0029 IMG 20211026 WA0021

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....