strike
செய்திகள்அரசியல்இலங்கை

தொடரும் ஆசிரியர் போராட்டம்! – மாணவர்கள் திரும்பி செல்லும் நிலை

Share

ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வவுனியாவில் இன்று பல பாடசாலைகள் பூட்டப்பட்டிருந்தன. இதனால் பாடசாலைக்கு வந்த மாணவர்கள் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.

200 இற்கு உட்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளைத் திறக்குமாறு அரசு அறிவித்தல் விடுத்திருந்த நிலையில் இன்று பாடசாலைகள் திறக்கப்படவிருந்த போதிலும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் அவர்களது போராட்டம் தொடர்கின்றது.

இந்நிலையில், வவுனியாவில் 85 பாடசாலைகள் இன்று திறக்கப்படும் என வலயக்கல்வி அலுவலகங்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் இன்று காலை பாடசாலைகள் பலவற்றின் முன் வாயில் கதவு மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இதன் காரணமாக பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.

இதேவேளை, சில பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்றபோதிலும் குறைந்தளவான மாணவர்களே வருகை தந்திருந்தனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...