elec
இலங்கைஅரசியல்செய்திகள்

மின் கட்டணங்களுக்கு சலுகை?

Share

மின் கட்டணங்களுக்கான சலுகைக்காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுற்றுலா ஹொட்டல்களுக்கான மின் கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், குறித்த சலுகை மேலும் சிறிது காலத்துக்கு நீடிக்கப்படவுள்ளது.

இவ் விடயம் தொடர்பில், மின்சாரத்துறை அமைச்சருடன் விரைவில் கலந்துரையாடப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஹொட்டல்களுக்கு மின்கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அக் கால அவகாசம் கடந்த செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், மின் கட்டண சலுகை தொடர்பில்,ஹொட்டல் உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். கொரோனாத் தொற்று பரவல் காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அதனை வழமைக்குக் கொண்டுவர மேலும் சில மாதங்கள் தேவை – என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...