mahindananda aluthgamage
செய்திகள்இலங்கை

மஹிந்தானந்த தலை குறிவைப்பு!

Share

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்குள் கலந்துரையாடல் இடம்பெற்றுவருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

உரிய முகாமைத்துவ பொறிமுறையின்றி – மாற்று ஏற்பாடுகள் இன்றி அவசரமாக இரசாயன உரத்துக்கு தடை விதித்தமை, இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, பெருந்தோட்டத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி உட்பட மேலும் பல விடயங்களை மையப்படுத்தியே இப் பிரேரணையை கொண்டுவருவதற்கு ஏற்பாடு இடம்பெற்று வருகின்றது.

நம்பிக்கையில்லாப்பிரேரணையை தோற்கடிப்பதற்கான பலம் அரசாங்கம் வசம் இருந்தாலும், விவசாயிகளின் பிரச்சினைகளை பட்டியலிட்டு காட்டும் நகர்வாகவே இப் பிரேரணை முன்வைக்கப்படும் என தெரியவருகின்றது.

வரவு – செலவுத் திட்ட கூட்டத்தொடர் ஆரம்பமாவதால், பிரேரணை கொண்டுவந்தால்கூட அதனை ஜனவரி மாதமளவிலேயே விவாதத்துக்கு எடுப்பதற்கு அரசாங்கம் உடன்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...