dodramp 17
உலகம்

ஹோர்முஸ் நீரிணை யாருக்கு மீண்டும் வலுவான தாக்குதல் நடத்திய அமெரிக்கா.

Share

அமெரிக்கா, ஈரான் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்கா ஹோர்முஸ் நீரிணையில் தலையிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் இது ஈரானின் அசைக்க முடியாத சிவப்புக் கோடு (red line) ஆகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு பகுதிகள் வரை தாக்குதல்களை நடத்தியதுடன், இஸ்லாமிய குடியரசான ஈரான் மீதான கடற்படை முற்றுகையை மீற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட கப்பல் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதற்கு பதிலடியாக, இப்பகுதியில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியதுமேலும் தனது தாக்குதல்கள் தீவிரமடையக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

அத்துடன், கடந்த மாதம் ஒப்புக்கொள்ளப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்தம் முறிந்துவிட்ட நிலையில்ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டிற்காக அமெரிக்காவும் ஈரானும் மோதி வருவதால், இப்பகுதி கடந்த சில நாட்களாக இரு தரப்பு தாக்குதல்களையும் சந்தித்து வரும் நிலையில், அமெரிக்க தாக்குதல்களில் 35-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய வன்முறை சுழற்சியில் முதன்முறையாக, ஈரானின் தலைநகரான தெஹ்ரானை சுற்றியுள்ள பகுதிகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதியன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போரைத் தொடங்கியபோது, ​​தெஹ்ரான் கப்பல் போக்குவரத்திற்கு அந்த நீரிணையை மூடியது.

இந்த நடவடிக்கை கச்சா எண்ணெய் விலையை வெகுவாக உயர்த்தியதுடன், பேச்சுவார்த்தைகளில் ஈரானுக்கு முக்கிய செல்வாக்கையும் அளித்தது. ஈரானிய ராணுவத்தின் ‘கதம் அல்-அன்பியா’ மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் எப்ராஹிம் ஜோல்ஃபகாரி ஒரு எச்சரிக்கையை விடுத்தார்.

ஈரானின் பாலங்கள் மற்றும் மின் நிலையங்களை தாக்கக்கூடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் விடுத்து வரும் எச்சரிக்கைகளை அமெரிக்கா செயல்படுத்தினால், இப்பகுதியில் உள்ள “அனைத்து உள்கட்டமைப்புகள்” மீதும் ஈரான் பரவலான தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
antonello da messina
உலகம்

இத்தாலியில் திருடப்பட்ட பலநூறு கோடி ரூபா பெறுமதியான ஓவியங்கள்!

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் புகழ்பெற்ற...

Earthquake
உலகம்

இந்தோனேசியாவில் இன்றும் நிலநடுக்கம்.

இந்தோனேசியாவில் தொடர் நிலநடுக்கங்க ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது,...

gunshootpolise 1
உலகம்

மிச்சிகன் மாநிலத்தில் துப்பாக்கி சூடு – துப்பாக்கிதாரி உள்ளிட்ட பலர் பலி!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், உயிரிழந்தவர்களில் துப்பாக்கிச்சூட்டை...

தாய்வானில்
உலகம்

தாய்வானில் முடக்கப்பட்ட இணைய சேவை – சீனாவின் அச்சுறுத்தலின் விளைவாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள்!

தாய்வானில் முன்னெடுக்கப்பட்டு வரும் வருடாந்த ‘ஹான் குவாங்’ இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாகத் தலைநகர் தாய்பேயில்...