durmp 1
உலகம்

ட்ரம்பின் கையொப்பம் இல்லை – சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது புதிய சட்டம்.

Share

 

ரொனால்ட் ட்ரம்பின் கையொப்பம் இல்லாமலே அமெரிக்காவில் 21 ஆம் நூற்றாண்டு வீட்டுவசதிச் சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

21 ஆம் நூற்றாண்டு வீட்டுவசதிச் சட்டமானது வீடு வாங்குவோர், வாடகைக்கு குடியிருப்போர் மற்றும் வீடு கட்டுவோருக்கான மத்திய அரசின் கொள்கையில் செய்யப்பட்ட மிகப்பெரிய மாற்றமாக காணப்படுகின்றது.

ரொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்ட சட்டமூலத்தில் கையெழுத்து இடாத காரணத்தினால் இந்த சட்டம் தற்போது தானாகவே நடைமுறைக்கு வரவுள்ளது.

“SAVE America Act” என்ற தேர்தல் சட்டத்தை வீட்டுவசதி சட்டத்துடன் சேர்க்க விரும்பியதால் அமெரிக்காவில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் நிறைவேறிய வீட்டுவசதி மசோதாவில் ரொனால்ட் ட்ரம்ப் கையெழுத்து இட மறுத்தார்.

ஆனால் அந்த “SAVE America Act” என்ற சட்டத்திற்கு போதுமான ஆதரவு கிட்டவில்லை என்பதனால் ஆத்திரமடைந்த டொனால்ட் ட்ரம்ப் வீட்டு வசதி சட்டமூலத்தில் கையொப்பமிட மறுத்துவிட்டார்.

அந்த நாட்டின் சட்டத்தின்படி, ஜனாதிபதி ஒரு சட்டமூலத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டோ (Veto) செய்யாமல், கையெழுத்திடாமலும் இருந்தால், 10 நாட்கள் கழித்து அது தானாகவே சட்டமாகிவிடும்.

அந்த வகையில் இந்த வீட்டுவசதி சட்டமூலம் சனிக்கிழமை நள்ளிரவு முதல் தானாகவே நடைமுறைக்கு வர இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் பலவும் செய்திகளினை வெளியிட்டுள்ளன.

Share
தொடர்புடையது
feathredmnnkn
உலகம்

இத்தாலியின் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

இத்தாலியின் எட்னா எரிமலை மீண்டும் சீற்றமடைந்து வருவதால், சிசிலி தீவிலுள்ள கெடானியா சர்வதேச விமான நிலையத்திற்கு...

robo
உலகம்

ட்ரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி முடிவு – எச்சரித்துள்ள சீனா!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சீனாவில் தயாரிக்கப்படும் புதிய தரவுமைய சாதனங்களின் இறக்குமதிக்கு தடை...

சூறாவளி 1
உலகம்

ஜப்பானை நோக்கி வேகமாக நகரும் சூறாவளி – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள்.

பசிபிக் பெருங்கடலில் உருவான ‘டொல்பின்’ தீவிர சூறாவளி ஜப்பானை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வருவதுடன், அது...

huteees
உலகம்

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்களால் அதிகரிக்கும் மசகு எண்ணெய் விலை.

சவூதி அரேபியாவை சேர்ந்த ஆறு பிரம்மாண்ட எண்ணெய் தாங்கிகள், யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக,...