eqt1r6no djokovic
விளையாட்டுகுற்றம்

தனது தவறை ஒப்புக் கொண்டார் டென்னிஸ் நட்சத்திரம்

Share

நோவாக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் போது தாம் பொய்யான தகவல்களை ஆவணங்களில் பதிவிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

நோவாக் ஜோகோவிச் தாம் பிழை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

208218 novak djokovic

சமூக ஊடகங்களின் ஊடாக ஜோகோவிச் இட்டுள்ள பதிவில் இது பற்றி குறிப்பிட்டுள்ளார்.

தமது பயண விண்ணப்பத்தை பூர்த்தி செய்த முகவர் உண்மையான தகவல்களை வழங்கத் தவறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக மேற்கொண்ட பயணங்கள் பற்றிய விபரங்கள் பொய்யானவை என இதன்போது ஒப்புக்கொண்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்பதற்கு 14 நாட்களுக்குள் எந்தவொரு நாட்டுக்கும் பயணிக்கவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் அவுஸ்திரேலியாவிற்கு பயணம் செய்ய முன்னர் சேர்பியா மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளுக்கு ஜோகோவிச் பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது முகவர் விண்ணப்பத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த பிழையான கூட்டில் (வெளிநாட்டு பயணம் பற்றி கேட்கப்பட்டிருந்த கேள்வி) டிக் செய்து விட்டதாக ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

இது ஓர் மனிதத் தவறு எனவும் அதற்காக முகவர் தம்மிடம் மன்னிப்பு கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோகோவிச்சை நாடு கடத்துவது குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பித்தக்கது.

#sportsnews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Rumesh Tharanga
விளையாட்டு

வரலாற்று சாதனையுடன் இலங்கைக்கு கிடைத்த தங்கம்.

இலங்கை வீரரான ருமேஷ் தரங்க , கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில்,...

fifa world cup 2026
விளையாட்டு

FIFA விற்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை.

உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் திட்டத்தை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு...

அஸ்வின்
விளையாட்டு

சூர்யவன்ஷிக்குத் தான் தெரிவித்த கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ள அஸ்வின்.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்குத்...

உபாலி தர்மதாச
விளையாட்டு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் காலமானதாக தகவல்.

நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான உபாலி தர்மதாச,...