Death 3
செய்திகள்இந்தியா

இறுதிச்சடங்கின் போது உயிரிழந்தவர் கண்விழித்தமையால் அதிர்ச்சி (வீடியோ)

Share

உயிரிழந்த நபரின் உடலுக்கு சுடுகாட்டில் தீ வைப்பதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில் அவர் திடீரென கண் விழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் நரேலா பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. 62 வயதான சதீஷ் பரத்வாஜ் என்பவர் நேற்று முன் தினம் உயிரிழந்தார் என குடும்பத்தார் தெரிவித்து, பின்னர் அவரின் சடலத்திற்கு இறுதிச்சடங்கு செய்தனர்.

இதை தொடர்ந்து அவரது சிதைக்கு தீ வைப்பதற்கு சில நாழிகையில் அவர் கண்விழித்துள்ளார்.

பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில்,

குறித்த நபர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சில காலமாகவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு வெண்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் வெண்டிலேட்டரில் இருந்து அவரை எடுத்தவுடன் மூச்சு விடுவதை நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து சதீஷ் இறந்துவிட்டதாக குடும்பத்தார் கருதியுள்ளனர். மருத்துவமனையின் அறிவுறுத்தலை கேட்காமலேயே அவர் உயிரிழந்துவிட்டார் என நினைத்து அழைத்து வந்துள்ளனர் என கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என பொலிஸார் கூறியுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10
இந்தியாஇலங்கைசெய்திகள்

மோடியின் வருகையின் போது இலங்கையிடம் முன்மொழியப்பட்ட முக்கிய திட்டம் நிலுவையில்..

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது, இலங்கையுடன் நில இணைப்புத் திட்டத்தை இந்தியா...

12 3
இந்தியாசெய்திகள்

இந்தியாவில் அடுத்தடுத்து பதிவான இரு நிலநடுக்கங்கள்!

இந்தியாவின் (India) – வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள்...

29 1
இந்தியாசெய்திகள்

கச்சதீவு விவகாரம் : தமிழக ஆளுநர் முன்வைத்த குற்றச்சாட்டு

கச்சதீவு விவகாரம் : தமிழக ஆளுநர் முன்வைத்த குற்றச்சாட்டு கச்சதீவில் இந்திய கடற்றொழிலாளர்கள் உரிமை பறிக்கப்பட்டதற்கு...

14
இந்தியாசெய்திகள்

சீமானை கைது செய்ய தமிழக அரசுக்கு அழுத்தம்!

பெரியார் கொள்கைகளுக்கு எதிராக பேசுவதால் என்னை கைதுசெய்ய தி.க.விடம் இருந்து தமிழக அரசுக்கு அழுத்தம் சென்றுள்ளது...