பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரே வாரத்திலேயே இரண்டு வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்கள். கடந்த வாரம் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அபிஷேக் மீண்டும் வீட்டிற்குள் போட்டியாளராக அனுப்பப்பட்டார்.
இந்த வாரத்தில் நடன கோரியோகிராபர் அமீர் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்த நிலையில் தற்போது சஞ்சீவும் சென்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சஞ்சீவ் சினிமா உலகிலும், சீரியல் உலகிலும் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டுக்குச் செல்வதற்குமுன்பு, சஞ்சீவ் பேசிய வீடியோ ஒன்றை சின்னத்திரை நடிகர் தீபக் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.
Leave a comment