செய்திகள்உலகம்

கொவிட் தொற்றை கட்டுப்படுத்த புதிய மாத்திரை கண்டுபிடிப்பு!

Share

கொவிட் தொற்றுநோயின் மூன்றாவது அலை பெரிதாக உருவாகி உள்ளதால் பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குதல் மற்றும் புதிய வாய்வழி கொவிட் மாத்திரைகளின் பயன்பாடு குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையில், கொவிட் தொற்றினை கையாள கொவிட் மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டாலும் இதன் பயன்பாடுகள் குறித்து வைத்திய வல்லுநர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.

அதாவது, கொவிட் மாத்திரைகள் குறிப்பாக பாகஸ்லோவிட் , மோல்னுபிரவீர், பைசர் மற்றும் மெர்க் ஆகியன புதிய கொவிட் சிகிச்சையில் உறுதியளிக்கும் வைரஸ் தடுப்பு மருந்துகள் ஆகும். அதனை நோயாளிகள் வீட்டில் இருந்தபடியே எடுத்துக்கொள்ளலாம்.

இதில் கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மோனோக்ளோனஸ் ஆன்டிபாடிகளின் அதே நுட்பத்தையே இம் மாத்திரைகளும் பயன்படுத்துகின்றன. தற்போது இவ் கொவிட் மாத்திரைகளின் விலை உயர்ந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், கொவிட் நேர்மறை அறிகுறிகளை பரிசோதித்த மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் நோய்த்தொற்றின் முன்னேற்றத்தை தடுக்கலாம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை தவிர்க்கலாம். மிக முக்கியமாக இம் மாத்திரைகளின் மூலம் வைரஸை குறைக்கலாம் என்று தொற்று நோய் நிபுணர் டாக்டர் அனுப் வாரியர் கூறியுள்ளார்.

கொவிட் சிகிச்சைக்காக இங்கிலாந்தில் அங்கிகரிக்கப்பட்ட முதல் கொவிட் எதிர்ப்பு மாத்திரையான மோல்னுபிராவிரை  பயன்படுத்த இங்கிலாந்து மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளது. இம் மாத்திரைகள் இறப்பு விகிதத்தை 90 சதவீதம் கட்டுப்படுத்துவதாக கூறப்பட்டாலும் அதனை உத்தியோகப்பூர்வமாக உறுதியளிக்கின்ற தரவுகள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.

ஆகவே, இந்த மாத்திரைகளை நாம் முழுமையாக நம்பமுடியாது. காரணம் மாத்திரைகள் எச்.ஐ.வி மருந்துகளைப் போலவே இருக்கின்றன. எனவே கல்லீரல் செயலிழக்க கூடிய வாய்ப்புகள் அதிகம் ஆகவே உடற் பாகங்களை கண்காணித்தல் அவசியம். ஏனெனில் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே,மாத்திரைகளை விட தடுப்பூசிகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் அதன் நடவடிக்கைகள் வலுப்படுத்த வேண்டும் என நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...