Jana Nayagan vijay d 2
சினிமா

மீண்டும் சிக்கலில் ஜனநாயகன்!

Share

CM விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், மிகப்பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகியுள்ளது.

மேலும், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தணிக்கை பிரச்சினைகளைத் தாண்டி, ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

விஜய்யின் இறுதிப் படம் என்பதால், உலகளவில் 3,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரைப்படம் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, விஜய் ரசிகர்களும், தமிழக வெற்றி கழக தொண்டர்களும் திரையரங்குகளில் சிறப்பான கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் காலை 7 மணி சிறப்புக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் மொத்தமாக 13 திரையரங்குகளில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், 3 திரையரங்குகளுக்கு மட்டும் சிறப்புக் காட்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், பொதுமக்களுக்கு போதுமான அளவில் டிக்கெட் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டதால், சிறப்புக் காட்சியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
vijay sad 1
சினிமா

ஜனநாயகன் வசூல் நிலவரம் என்ன?

விஜய்யின் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால், அந்த படம் பட்டிதொட்டி எங்கும் அமோக வரவேற்பை...

zendaya
சினிமா

காதணியால் வந்தது தொந்தரவு.

தி ஒடிஸி திரைப்படத்தின் விழாவில் சுமார் 3,000 ஆண்டுகள் பழமையானதாகக் கூறப்படும் ஈரானியத் தங்கக் காதணிகளை...

Amaran
சினிமா

அறிவிக்கப்பட்டது தேசிய விருதுகள் – அதிக விருதுகளை அள்ளிய SK இன் திரைப்படம்.

  2024ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் சிறந்த தமிழ் படமாக ராயன்...

vijay gv
சினிமா

தளபதி வந்ததால் தள்ளி போகிறேன் – GV பிரகாஷ்

விஜய்யின் ஜனநாயகன் படம் வரும் ஜூலை 23ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விஜய்யின்...