விஜய்யின் ஜனநாயகன் படம் வரும் ஜூலை 23ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விஜய்யின் கடைசி படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் நடித்து இருக்கும் Immortal படம் முதலில் ஜூலை 23ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதே நாளில் விஜய் படம் வருவதால் இந்த படம் தள்ளிவைக்கப்டுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
“தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும். அதுவும் இது One Last time. ஜனநாயகன் டீமுக்கு வாழ்த்துக்கள். Immortal படம் செப்டம்பர் 4ம் தேதி வெளியாகும்.” என ஜி.வி.பிரகாஷ் பதிவிட்டுள்ளார்.