அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, செய்தியாளர்களிடம் பேசிய போது, ஈரான் நினைத்தால் மத்திய கிழக்கிலேயே மிகவும் பணக்கார நாடாக உருவாக முடியும் எனவும்
ஆனால் அங்குள்ள ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தீவிரவாத மதகுருமார்கள் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து வருவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அத்துடன் அவர், “ஈரான் தீவிரவாத மதகுருமார்களால் நடத்தப்படும் ஒரு நாடு. நாட்டின் பொருளாதார பிரச்சினைகள் குறித்து அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை அவர்கள் தங்கள் சொந்த நாட்டையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமது நாட்டின் பணத்தை உலகம் முழுவதிலும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவே பயன்படுத்தப்படுகிறது, மக்களுக்குப் பயன்படுத்தாமல் ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஹூதிகள் மற்றும் ஷியா ஆயுதக் குழுக்களுக்கு வாரி வழங்குகிறார்கள்.
மேலும், பேசிய அவர், “ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதே அமெரிக்காவின் முதன்மை இலக்காகும் என்றும் அணு ஆயுதம் ஏந்திய ஈரான் இந்த உலகத்திற்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.