5 39
ஏனையவை

மனோவுக்குத் தேசியப் பட்டியல் வழங்குமா சஜித் அணி…! தொடர் இழுபறிநிலை

Share

மனோவுக்குத் தேசியப் பட்டியல் வழங்குமா சஜித் அணி…! தொடர் இழுபறிநிலை

மனோ கணேசன் உட்பட பலரும் தேசிய பட்டியல் வாய்ப்பு கோரியுள்ளனர். உரிய பரிசீலனையின் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்

கொழும்பில் (Colombo) நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்குத் தேசியப் பட்டியல் ஊடாக வாய்ப்பளிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்

தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணிக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பதில் இழுபறி நிலை நீடிப்பதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளின்படி புதிய ஜனநாயக முன்னணிக்கு இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் கிடைத்துள்ளன.

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியலில் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன(dinesh gunawardena) மற்றும் புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகமாக இருந்த ஷர்மிளா பெரேரா(Sharmila Perera) ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் உள்ளன.

எனினும், புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரு பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் தொடர்பில் இதுவரையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
hki 2
ஏனையவைகுற்றம்

குழந்தையினை கைவிட்டு சென்ற தாய் அடையாளம் காணப்பட்டார்!

மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 4 வயது சிறுமியின்...

Gunmen
ஏனையவை

விமான நிலையத்தில் கைதான கடத்தல் கும்பல்.

இலங்கை குடும்பம் ஒன்றை தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கஜகஸ்தானுக்கு கடத்த...

zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள்...

ஏனையவை

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт Меня зовут...