அமெரிக்கா, மெக்சிகோ, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க நேற்று (02) கடமைகளைப் பொறுப்பேற்றார்.
தூதுவராக இருந்த ரவிநாதா ஆரியசிங்க ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கோத்தாபய ராஜபக்சவினால் மகிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டிருந்தார்.
தூதுவர் பதவிக்கான கடமைகளை பொறுப்பேற்பதற்காக மகிந்த சமரசிங்க கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment