ஏனையவை
இந்தியாவில் உற்பத்தியாகும் புது ஐபோன் 14! விரைவில்


இந்தியாவில் தமிழகத்தின் சென்னை அருகில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் புது ஐபோன் 14 மாடல்கள் உற்பத்தி நடைபெற உள்ளன.
ஐபோன் 14 சீரிசில்- ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த மாடல்களில் ஐபோன் 14 உற்பத்தி இந்தியாவில் அடுத்த சில தினங்களில் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் ஐபோன்கள் உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.