24 65a26468b6aa5
ஏனையவை

112 வயதில் 8வது திருமணத்திற்கு தயாராகும் மூதாட்டி: திகைப்பில் மூழ்கும் இளைஞர்கள்

Share

112 வயதான சிட்டி ஹவா என்ற மூதாட்டி 8 முறையாக திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சிட்டி ஹவா(Siti Hawa) என்ற 112 வயது மூதாட்டி மலேசியாவின் தும்பட்(Tumpat) பகுதியில் வாழ்ந்து வருகிறார்.

சிட்டி ஹவா இதற்கு முன்னதாக 7 முறை திருமணம் செய்து கொண்டுள்ளார், அதில் சில கணவர்கள் தற்போது உயிரிழந்தும் விட்டனர்.

மற்ற கணவர்கள் சிட்டி ஹவாவிடம் இருந்து விவாகரத்து பெற்றுக் கொண்டுவிட்டனர். இவருக்கு 5 குழந்தைகள், 19 பேரக்குழந்தைகள் மற்றும் 30 கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தன்னை யாராவது திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டு Propose செய்தால் மீண்டும் ஒரு முறை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக 112 மூதாட்டி சிட்டி ஹவா தெரிவித்துள்ளார்.

அதாவது தன்னுடைய 8வது திருமணத்திற்கு தயார் என்று பாட்டி தெரிவித்துள்ளார், மேலும் தனக்கு சின்னதாய் பார்வை குறைபாடு மட்டும் இருப்பதாகவும் ஆனால் தினசரி வேலைகளை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது 58 வயதாகும் அவரது இளைய மகனுடன் சிட்டி ஹவா வாழ்ந்து வருகிறார், இவரது நீண்ட கால ஆயுளுக்கு எந்தவொரு ரசியமும் இல்லை என்றும் வெள்ளை அரிசியும், தண்ணீரும் மட்டுமே உபயோகிப்பதாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...