24 65a2683d4b066
உலகம்செய்திகள்

லண்டன் மேயர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் போட்டி

Share

பிரித்தானியாவை அடுத்து லண்டனையும் ஒரு இந்தியர் ஆட்சி செய்வாரா? அதற்கு வாய்ப்புகள் அதிகம்.

ஏனெனில், இம்முறை மேயர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்கள் போட்டியிடுகின்றனர்.

மூன்றாவது முறையாக லண்டன் மேயர் பதவிக்கு போட்டியிடவுள்ள பாகிஸ்தான் வம்சாவளி மேயர் சாதிக் கானுக்கு அவர்கள் கடும் சவாலாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

63 வயதான தொழிலதிபர் தருண் குலாட்டி (Tarun Ghulati) மற்றும் 62 வயதான சொத்து தொழிலதிபர் ஷியாம் பாட்டியா (Shyam Bhatia) ஆகியோர் மே 2 மேயர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

குலாட்டி கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவிற்கு வந்திருந்தபோது தனது மேயர் பிரச்சாரத்தை தொடங்கினார். அவர் தனது பிரசாரத்தில் “trust and growth” என்ற டேக் லைனை பயன்படுத்துகிறார்.

அதேபோல், பாட்டியா ‘ambassador of hope’ என்ற டேக் லைனுடன் பிரச்சாரம் செய்கிறார்.

டெல்லியில் பிறந்த குலாட்டி, லண்டனின் தற்போதைய மேயர் சாதிக் கான் மக்கள் ஆதரவை இழந்துவிட்டதாகவும், மற்றொரு பாரிய கட்சி நிறுத்தும் வேட்பாளரை வாக்காளர்கள் நம்பவில்லை என்றும் கூறினார்.

இந்தியாவில் மேயர் வேட்பாளர் பிரசாரத்தை துவங்கியது குறித்து பேசிய தருண் குலாட்டி, “இந்தியா எனது பூர்வீகம், நான் பிறந்த இடம், லண்டன் எனது கர்ம பூமி, நான் எனது வேலையைச் செய்யும் இடம். பெரியவர்கள், பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளின் ஆசிகள் எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அதனால்தான் இந்தியாவில் இருந்தே பிரசாரத்தை மேற்கொள்ள முடிவு செய்தேன்’ என கூறினார்.

பிரித்தானியாவில் பிறந்த பாட்டியா தனது பிரசாரத்தில் “நகரின் தற்போதைய நிலையைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். செயல்படாத கொள்கை அமைப்பால் குடியிருப்பாளர்கள் சாதகமாகப் பயன்படுத்தப்பட்டு பாதிக்கப்படுவதைக் கண்டு நான் வருத்தமடைகிறேன். இந்த நோக்கத்திற்காக எனது ஆற்றலையும் ஆர்வத்தையும் செலுத்த நான் முழுமையாக கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறினார்.

இந்த இரண்டு இந்திய வம்சாவளி பிரித்தானியர்களைத் தவிர, Susan Hall (கன்சர்வேடிவ் கட்சி); Rob Blackie (லிபரல் டெமாக்ராட்); Howard Cox (சீர்திருத்த யுகே); Zoe Garbett (பசுமைக் கட்சி); Natalie Campbell (சுயேச்சை); Amy Gallagher (சுயேச்சை); Rayhan Haque (சுயேச்சை); Andreas Michli (சுயேச்சை) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...