‘அரபு வசந்தம்’ என்ற சொற்பதத்தை அரசு பயன்படுத்தவில்லை. போராட்டக்காரர்கள்தான் பயன்படுத்தினர். அதனையே அரசு சுட்டிக்காட்டியுள்ளது – என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாட்டுக்கு தற்போது சுற்றுலாப் பயணிகள்வர ஆரம்பித்துள்ளனர். எனவே, பிரச்சினைகள் விரைவில் தீர்ந்துவிடும். இந்நிலைமை ஏற்பட்டால் எதிரணிகளால் அரசியல் செய்ய முடியாது. எனவேதான் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முற்படுகின்றனர். ஜே.வி.பியின் தேசியப்பட்டியலில் இருந்த உறுப்பினர் ஒருவரும் போராட்டத்துக்கு வந்துள்ளார்.
அமைதியான நடைபெற்றுள்ள போராட்டத்தை அடிப்படைவாதிகள் கையில் எடுத்துள்ளனர். எனினும், ஜனாதிபதி பொறுமை காத்தார். மக்கள் எதிர்ப்பை வெளியிட இடமளித்தார்.
எனினும், அடிப்படைவாதிகள் குழப்பியுள்ளனர். இராணுவத்தினர் தீ வைக்கவில்லை. போராட்டத்தில் இருந்தவர்களே வைத்துள்ளனர், அதற்கான ஆதார படங்கள் உள்ளன.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment