“நான் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டேன்” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “தோல்வியடைந்த ஜனாதிபதியாக நான் பதவி விலகப்போவதில்லை....
“ மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு நான் வலியுறுத்தவில்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்குமானால் அப்பதவியில் அவர் நீடிப்பதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. அவ்வாறு இல்லாவிட்டால் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு ஆட்சியை ஒப்படைக்க வேண்டிய...
ஜனாதிபதிக்கும், அரச பங்காளிக்கட்சிகள் மற்றும் 11 கட்சிகளின் கூட்டணிக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த பேச்சு பிற்போடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி அரசமைப்பதற்கு தான் கொள்கையளவில் இணங்கியிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய...
கொட்டகலை பத்தனை சந்தியில் இன்று அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தோட்டத் தொழிளாளர்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. பத்தனை கிறேக்கிலி, மவுண்ட்வேர்ணன், இராணியப்பு, பொரஸ்கிறிக் ஆகிய தோட்டங்களை சேர்ந்த தோட்ட...
தமது கட்சியால் விடுக்கப்பட்டுள்ள நிபந்தனையை ஜனாதிபதி ஏற்காதபட்சத்தில், அவர் தலைமையில் நாளை இடம்பெறவுள்ள சந்திப்பில் கலந்துகொள்ளமாட்டோம் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசிலிருந்து வெளியேறி, சுயாதீனமாக செயற்படும் முடிவை கடந்த...
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் இன்று (28.04.2022) பணிபுறக்கணிப்பு போராட்டம் இடம்பெறும் நிலையில், இதற்கு மலையகத்தில் இருந்தும் முழு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது....
11 கட்சிகளுக்கிடையிலான விசேட கூட்டமொன்று இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது. சர்வக்கட்சி அரசமைப்பதற்கு தான் இணக்கம் எனவும், அதற்கான வேலைத்திட்டத்தை முன்வைக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் 11 கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....
இன்று இலங்கைத் தீவில் எழுந்துள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆட்சி மாற்றமே தீர்வெனக் கருதும் சூழல் ஒன்று தென் இலங்கையில் வலுவடைந்துள்ளது. அத்தகைய ஆட்சி மாற்றத்தை நோக்கிய காலிமுகத்திடல் போராட்டம் இலங்கையர்கள் அனைவரையும் இன, மத,...
“கோட்டா வீட்டுக்குப் போ” என்ற கோஷத்துடன் கொழும்பு – காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் இன்று 18 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. ஜனாதிபதி மற்றும் அரசைப் பதவி விலகுமாறு கோரி முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்தில்...
மொட்டுடன் ஆட்சி அமைத்துக் கொள்ளையர்களைப் பிடிக்க முடியாது எனவும், அவர்களுடன் இணைந்து ஆட்சியமைக்குமாறு மக்கள் கோரவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அரசியல் பழிவாங்களால் பாதிக்கப்பட்டோர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர்...
புதிய அமைச்சரவை நியமனத்துக்குப் பின்னர் முதன் முறையாக அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது, 20ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி நிறைவேற்று அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச...
“ராஜபக்ச அரசு ஆடிய ஆட்டங்கள் அடங்கப் போகின்றன. இந்த அரசைக் கவிழ்க்கும் எமது பிரேரணை வெல்லப்போகின்றது.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்....
” இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன்பட்டுள்ளார். இது தொடர்பில் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு மகா சங்க சபையின் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். தற்போதைய அமைச்சரவையை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே,...
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கொழும்பு விஜேராம மாவத்தை இல்லத்தின் சுவரில் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எதிரான வாசகங்களை எழுதி தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிராக அனைத்துப்...
மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர வீதித் தடைகளை அகற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களதிகாரம் என்ற சுனாமியால் அகப்பட்டுள்ள அரசு, தற்போது அதிகாரத்தைப் பாதுகாத்துக்...
அடுத்த 48 மணிநேரத்துக்குள் தெற்கு அரசியலில் திடீர் திருப்பம் ஏற்படக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பாக பேசப்படுகின்றது, அரசுக்கு ஆதரவு வழங்கிவந்த டலஸ் அழகப்பெரும, பிரதமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்திவிட்டார். மற்றுமொரு...
” இந்த அரசுக்கு சர்வதேச ஒத்துழைப்பு கிடைக்காது. எனவே, புதிய அரசு அமைந்தால்தான் சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெறக்கூடியதாக இருக்கும் .” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்....
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் பிரச்சினைகள் இருக்கலாம், கோபங்கள் இருக்கலாம். அதற்காக அவர் தலைமையிலான அரசைக் கூண்டோடு கவிழ்க்க முயற்சிக்க வேண்டாம்.” – இவ்வாறு நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.` “நாம் மிகவும் நெருக்கடியான நிலைமையில்...
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கோட்டாபய அரசைப் பதவி விலகுமாறு வலியுறுத்தியும் முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி இன்று முன்னெடுக்கப்பட்டது. முள்ளியவளை கொமர்ஷல் வங்கிக்கு அருகில் இருந்து ஆரம்பமான...
அரசுக்கு ஆதரவு தெரிவித்து, இ ராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட அரவிந்தகுமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பதுளையில் நகரில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அவரின் உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இப்போராட்டத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய...