1 9
அரசியல்இலங்கைசெய்திகள்

18 ஆவது நாளாகத் தொடரும் காலிமுகத்திடல் தன்னெழுச்சி!

Share

“கோட்டா வீட்டுக்குப் போ” என்ற கோஷத்துடன் கொழும்பு – காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் இன்று 18 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

ஜனாதிபதி மற்றும் அரசைப் பதவி விலகுமாறு கோரி முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்தில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கட்சி, இன, மத, மொழி பேதமின்றி மக்கள் அலையெனத் திரண்டு பங்கேற்று வருகின்றனர்.

இளைஞர் – யுவதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகின்றனர்.

நேற்றிரவு குறித்த பகுதியில் கூடியிருந்த மக்கள் வெவ்வேறு செயற்பாடுகளின் ஊடாக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதனிடையே, அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பொருளாதார நெருக்கடியைக் கண்டித்தும் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Expired Medical
இலங்கை

பிரபல தனியார் மருந்தகங்களில் இடம்பெற்ற மோசடிகள் அம்பலம்.

நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில் பெருமளவிலான காலாவதியான மற்றும் தரமற்ற மருத்துவ...

arested 2
இலங்கை

காணித்தகராறால் பறிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் உயிர்.

காணித் தகராறு காரணமாக, அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள...

சி.டி.விக்ரமரத்ன
இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார் – பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி.

மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன...

Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...