பிரபாகரன் தோற்கடித்தார் என்றால், இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையைப் பற்றி பேசுவதற்குத் தயார் இல்லையென்றால், நீங்கள் ஜனாதிபதியாக வந்து என்ன செய்யப்போகிறீர்கள். இவ்வாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.....
தொடருந்து நிலைய அதிபர்கள் இன்று (14) மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் உபதலைவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை...
இறக்குமதியான 500 அரிசி கொள்கலன்கள் நேற்று(13) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தனியார் தரப்பினரால் அரிசி கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வரி நிவாரணத்திற்கு ஏற்ப, இறக்குமதியான இந்த அரிசி...
வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணொருவர் பணத்தை மோசடி செய்துள்ளார். பத்தரமுல்லயில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தொடங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக்...
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை ஆராய்வு செய்வதற்காக சீன நிபுணர் ஒருவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று செயலிந்திருந்தது. இதுதொடர்பில் ஆய்வு மேற்கொள்வதற்காகவே...
நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பண்டாரகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டின் ஆட்சியை...
சாதி மத பேதமின்றி தமிழர் என்கிற ஒரு குடையின் கீழ் சமதர்ம சமுதாயம் இணைந்து உவப்போடு கொண்டாடும் திருநாளே இப் பொங்கல் திருநாள். தை பிறந்தால், வழி பிறக்கும் என்ற கூற்றிற்கிணங்க, அனைவரது வாழ்விலும், இன்பங்கள்...
விவசாயம் செழிப்படையக் காரணமான சூரிய பகவானுக்கு நன்றி நவிலும் தைப்பொங்கல் தினம், இந்துக்களின் சிறப்புமிக்க கலாசாரம் மற்றும் மதரீதியிலான பண்டிகையாக விளங்குகின்றது. இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, தமது தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்....
ஜனாதிபதித் தேர்தலில் என்னைத் தோற்கடிப்பதற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனே தீவிரமாக ஈடுபட்டார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் என்னைத் தோற்கடிப்பதற்கான முயற்சிகள் நகர்த்தப்பட்டது...
உள்ளாட்சிமன்ற தேர்தல் ஒத்திவைப்பானது ஜனநாயகத்துக்கு அடிக்கப்பட்டுள்ள சாவு மணியாகும். எனவே, தேர்தல்வரை காத்திருக்காமல் இந்த அரசை விரட்டியடிப்பதற்கான நிகழ்ச்சி நிரலை மக்கள் தயாரிக்க வேண்டும் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள்...
உள்ளாட்சிசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசின் முடியாவது ஏற்புடையதல்ல – என்று அரச பங்காளிக்கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. உள்ளாட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்படி கட்சியின் பிரமுகரான நாடாளுமன்ற...
இலங்கையின் முதலாவது பெண் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையாரும், முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவும் நாளை கொழும்பில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் சங்கமிக்கவுள்ளனர். சந்திரிக்கா அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்...
வெள்ளவத்தை_ ராமகிருஷ்ணா வீதி கடற்கரையில் ஒதுங்கிய சடலம் மீட்கப்பட்ட நிலையில் குறித்த சடலம் தனது சகோதரனினது என பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் நேற்று அடையாளம் காட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் டீ.பீ.பியல்...
கொழும்பு – பொரள்ளை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் இருந்து நேற்றையதினம் மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கைக்குண்டானது, தீ ஏற்படும் போது வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ்...
2012 இல் வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின்போது 8 கைதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு இன்று (12) அறிவிக்கப்பட்டது. இதன்படி இந்த சம்பவத்தின்போது சிறைச்சாலை ஆணையாளராக கடமையாற்றிய ஏமில் ரஞ்ஜன்...
நாடாளுமன்ற அமர்வுக்கு செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறியும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகிறது. அன்றைய தினம் காலை 7 மணி...
உலகெங்கும் வாழும் தமிழர்கள் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடவிருக்கின்ற வேளையிலே, தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் இரத்தக்கண்ணீர் வடித்து கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் அவர்கள் வாழ்வில் ஒளியேற்றவும் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும் விடுதலைப் பொங்கல் நாளை காலை...
#SriLanka – அரசியல் அரங்கு அரச எதிர்ப்புக்குழு சந்திரிக்கா பக்கம்…. சுதந்திரத்துக்கு பிறகே புதிய அமைச்சரவை பறிக்கப்பட்ட பதவியை பெற போட்டி சர்வஜன வாக்கெடுப்பு சாத்தியமா?
விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்று காலை சென்ற தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, தனது சாட்சியம் வாக்குமூலம், தமிழில் இருந்து சிங்கள மொழிக்கும், சிங்களத்தில் இருந்து தமிழ் மொழிக்கும் உரை...
கொழும்பு பொரளை – வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து கைக்குண்டு கண்டுஎடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டது என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். குண்டை செயலிழக்கச் செய்வதற்காக...