இலங்கையில் சோகத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மாணவனின் செயல்
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சோகத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மாணவனின் செயல்

Share

இலங்கையில் சோகத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மாணவனின் செயல்

இலங்கையில் பாடசாலை மாணவன் ஒருவரின் செயற்பாடு நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது தாய் உயிரிழந்த போதும், பாடசாலை அணிக்காக விளையாடி வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.

கொழும்பு இசிபத்தன கல்லூரியை சேர்ந்த ஹேஷான் ரந்திமால் என்ற மாணவனே வேதனையுடன் கல்லூரிக்காக வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.

19 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி போட்டித்தொடர் நடைபெற்று வருகிறது.

கொழும்பு இசிபத்தன கல்லூரி அணிக்கும் கொழும்பு புனித சூசையப்பர் கல்லூரி அணிக்கும் இடையிலான போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் ஹேஷான் ரந்திமால் பங்கேற்ற இசிபத்தன கல்லுரி வெற்றி பெற்றுள்ளது. போட்டி முடிவடைந்ததும் அணியின் சக மாணவர்களை ஹேஷானுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அனைவரும் இணைந்து அவரைஅழைத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் மைதானத்திலிருந்து இருந்த ஏனைய மாணவர்களுக்கு வேதனை அளித்திருந்தது. எனினும் தாய் உயிரிழந்திருந்த போதும் கல்லூரியின் வெற்றிகாக விளையாடிய மாணவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, இனிபத்தன மற்றும் புனித சூசையப்பர் அணியின் வீரர்கள் ஹேஷானின் வீட்டுக்கு சென்று அவரின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஹேஷானின் தாயார் நேற்று முன்தினம் காலமானதுடன், அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...