உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

27 3
Share

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் உள்ள அணுசக்தி பலம் குறித்து இதில் விவரிக்கப்பட்டுள்ளது.

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய திகதிகள் உலக வரலாற்றில் அழியாத கரும்புள்ளிகள் ஆகும். அதாவது, ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அமெரிக்கா நிகழ்த்திய அணுகுண்டு வீச்சு, மனிதகுலத்தின் அழிவு சக்தியின் உச்சகட்டத்தை உலகுக்கு அது உணர்த்தியது.

இரண்டாம் உலகப் போரின் அந்த இறுதி நாட்களில் நிகழ்ந்த இந்த கோர சம்பவம், போர் முறைகளையும் உலக அரசியலையும் நிரந்தரமாக மாற்றியமைத்துள்ளது.

அதன் பின்னர், அணு தொழில்நுட்பம் மற்றும் அணு ஆயுதங்கள் வேகமாகப் பெருகத் தொடங்கின.

பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் காரணங்களுக்காக பல நாடுகள் இந்த அபாயகரமான சக்தியைப் பெற முனைந்தன.

இன்று, ஒன்பது நாடுகள் அணுசக்தி நாடுகள் என்ற அந்தஸ்துடன் திகழ்கின்றன. அவற்றின் கையில் உள்ள பேரழிவு ஆயுதங்கள் உலக அமைதிக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக விளங்குகின்றன.

இந்த நாடுகளின் சரியான எண்ணிக்கை ரகசியமாக வைக்கப்பட்டாலும், அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான சர்வதேச பிரச்சாரம் (ICAN) வெளியிட்டுள்ள தகவல்கள் மூலம் உலகளாவிய ஆயுதப் பரவலை நாம் ஓரளவுக்கு அறியலாம்.

இந்த பட்டியலில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. ரஷ்யாவிடம் சுமார் 5449 அணு ஆயுதங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிக அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகள் (2024)

மதிப்பிடப்பட்ட அணு ஆயுதங்களின் எண்ணிக்கை
1 ரஷ்யா 5,449
2 அமெரிக்கா 5,277
3 சீனா 600
4 பிரான்ஸ் 290
5 பிரித்தானியா 225
6 இந்தியா 180
7 பாகிஸ்தான் 170
8 இஸ்ரேல் 90
9 வடகொரியா 50

முன்னொரு காலத்தில் பனிப்போரில் எதிரெதிர் துருவங்களாக இருந்த அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து, உலகிலுள்ள மொத்த அணு ஆயுதங்களில் சுமார் 88% மற்றும் பயன்படுத்த தயாராக உள்ள ஆயுதங்களில் 84% ஐ வைத்துள்ளன என்பது கவலை அளிக்கும் விஷயம்.

அணு ஆயுத நாடுகள் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் வசம் சுமார் 180 அணு ஆயுதங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

1974 ஆம் ஆண்டு இந்தியா தனது முதல் அணு ஆயுத சோதனையை நடத்தியதில் இருந்து, இந்தியாவின் அணுசக்தி திட்டம் சர்வதேச அளவில் பல விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது.

“முதலில் பயன்படுத்த மாட்டோம்” என்ற கொள்கையை இந்தியா கடைபிடித்து வந்தாலும், பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புச் சவால்களை கருத்தில் கொண்டு இந்தியாவின் அணு ஆயுதங்கள் ஒரு முக்கியமான தடையாகக் கருதப்படுகிறது.

அணு ஆயுதங்களின் இருப்பு உலக பாதுகாப்பிற்கு தொடர்ந்து ஒரு பெரிய அச்சுறுத்தலாகவே உள்ளது. ஆயுதங்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், பேரழிவுக்கான சாத்தியம் இன்னும் நீடிக்கிறது.

இந்த எண்ணிக்கை அதிர்ச்சியளிப்பதாக இருந்தாலும், ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அணு ஆயுதங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

1986 ஆம் ஆண்டு பனிப்போரின் உச்சத்தில் உலகளவில் சுமார் 70,300 அணு ஆயுதங்கள் இருந்தன.

ஆனால் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த எண்ணிக்கை சுமார் 12,331 ஆக குறைந்துள்ளது.

ஆயுதக் குறைப்பு ஒப்பந்தங்கள், நாடுகளின் சொந்த முன்முயற்சிகள் மற்றும் பழைய ஆயுதங்களை அழித்தல் போன்ற காரணங்களால் இந்த குறைவு ஏற்பட்டுள்ளது.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....

23 4
உலகம்செய்திகள்

பிரான்ஸ் குடியுரிமை விதிகளை கடுமையாக்க உத்தரவிட்ட அமைச்சர்: சாடியுள்ள மனித உரிமைகள் அமைப்பு

பிரான்ஸ் உள்துறை அமைச்சர், குடியுரிமை விதிகளை கடுமையாக்குமாறு தனது அமைச்சக மற்றும் துறைசார் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்....