rtjy 187 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கை வரும் உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல்

Share

இலங்கை வரும் உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல்

உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல் இலங்கைக்கு வருகை தர உள்ளது.

குறித்த கப்பல் நாளை (12.11.2023) இலங்கையை வந்தடைய உள்ளதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டில் உல்லாச பயண துறையை ஊக்குவிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் இலங்கைக்கு இந்த கப்பல் வருகைதரவுள்ளது.

மேலும் தெரிய வருகையில், குறித்த கப்பல், எதிர்வரும் 19ஆம் 20ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உல்லாச பயண துறையில் ஈடுபட்டு வரும் பிரபல நிறுவனமான YARA GLOBAL (pvt Ltd) நிறுவனத் தலைவர் H.M.Riyaldeen இந்தக் கப்பலுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

கப்பலில் வரும் உல்லாச பயணிகளை இலங்கையின் சுற்றுலாதலங்களை பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான கலந்துரையாடலும் உல்லாச பயணிகளோடு மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரியவருகிறது.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...