11
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் சிலருக்கு டீப்சீக்கை பயன்படுத்த தடை

Share

அமெரிக்காவில் சிலருக்கு டீப்சீக்கை பயன்படுத்த தடை

அமெரிக்க(USA) நாடாளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் டீப்சீக் ஏ.ஐ. மாதிரியை பதிவிறக்கும் செய்ய வேண்டாம் என உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனா கடந்த சில தினங்களுக்கு முன் டீப்சீக்(Deepseek) எனும் ஏ.ஐ. மாதிரியை வெளியிட்டது.

இது அமெரிக்காவின் சாட்ஜிபிடி, ஜெமினி, மெட்டா ஏ.ஐ மாதிரிகளுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.

டீப்சீக் மாதிரி இலவசமாக கிடைக்கும் என்பதால் பெரும்பாலானோர் தங்களது பதிவிறக்கம் செய்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களுடைய கணினி மற்றும் தொலைபேசிகளில் பதிவிறக்கும் செய்ய வேண்டாம் என நாடாளுமன்ற தலைமை நிர்வாக அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

AI தொழில்நுட்பத்தின் விரைவான பரிணாமம் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு மற்றும் நிர்வாக சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

டீப்சீக் தற்போது மதிப்பாய்வின் கீழ் உள்ளதால் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கவில்லை.

சாட்பாட்டை பயன்படுத்தி தீங்கு விளைவிக்கும் மென்பொருளை வழங்கவும், சாதனங்களை பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் அச்சுறுத்தும் நபர்களை மேற்கோள் காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இத்தாலி நாடு முழுவதும் டீப்சிக் ஏ.ஐ. மாதிரிக்கு தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...