image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

Share

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை (Railway Crossing) ஒன்றை அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாங்குளம் தொடருந்து நிலையத்துக்கும் முறுகண்டி தொடருந்து நிலையத்துக்கும் இடைப்பட்ட 302.6 கிலோமீற்றர் பகுதியில் இந்தக் கடவை அமைத்துத் தரப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

தொடருந்து கடவை இல்லாததால் பாடசாலை மாணவர்கள் முதல் அனைவரும் பாதிக்கப்படுவதுடன், உயிர் பயத்துடனேயே நடமாட வேண்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தக் கோரிக்கை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் முறையிட்டும் இதுவரை எவ்விதத் தீர்வும் கிடைக்கவில்லை என மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாகவும் இரண்டு தடவைகள் தொடருந்து திணைக்களத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தப் பகுதியில் பாதுகாப்பான புகையிரத கடவை அமைத்துத் தருமாறு மக்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...