உலகம்செய்திகள்

உக்ரைன் ஒப்பந்தத்தை புதுப்பியுங்கள்! புடினுக்கு அழுத்தம் கொடுத்த ஜனாதிபதி

Share

உக்ரைன் ஒப்பந்தத்தை புதுப்பியுங்கள்! புடினுக்கு அழுத்தம் கொடுத்த ஜனாதிபதி

உக்ரைன் தானிய ஏற்றுமதியை அனுமதிக்கும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் எகிப்து ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய ஒப்பந்தம் புத்துயிர் பெறுவது அத்தியாவசியமானது என்பதுடன் ஏழ்மையான ஆப்பிரிக்க நாடுகளுக்கு அளிக்கும் அவசர தீர்வு எனவும் எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மேற்கத்திய நாடுகள் தங்களது வாக்குறுதியை பின்பற்றவில்லை என தெரிவித்துள்ள புடின், ஆறு ஆப்பிரிக்க நாடுகளுக்கு இலவசமாக தானியங்களை வழங்க ஊறுதி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கருங்கடல் பாதையூடாக தானியங்களை வாங்கும் முக்கியமான நாடு எகிப்து. ஆனால் தற்போது உணவு பண்டங்களுக்கு ஏற்பட்ட விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு என்பது மேற்கத்திய நாடுகளின் கொள்கை தவறுகளின் விளைவாகும் என குறிப்பிட்டுள்ள புடின்,

உக்ரைனுடனான போருக்கு முந்தையது இந்த விவகாரம் என்றார். உக்ரைன் தானிய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய பின்னர், ரஷ்யா தனது கோர முகத்தை காட்டி வருகிறது.

உக்ரேனிய துறைமுகங்கள் மற்றும் தானிய கிடங்குகள் மீது மீண்டும் மீண்டும் குண்டுவீசி ஆயிரக்கணக்கான டன் தானியங்களை அழித்துள்ளது. மேலும், ரஷ்யாவின் படையெடுப்பு உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களை முற்றுகையிட வழிவகுத்தது.

இதனால் ஏற்றுமதிக்காக தயார் நிலையில் இருந்த 20 மில்லியன் டன் தானியங்கள் சிக்கிக்கொண்டது. இது உலகமெங்கும் உணவு விலைகளை உயர்த்தியது, மேலும் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தானிய பற்றாக்குறையை உருவாக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...