donald
உலகம்செய்திகள்

கைதானார் டிரம்ப்!!

Share

ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்சுக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் போட்டியிட்ட போது, அவருடன் இருந்த ரகசிய உறவு குறித்து ஸ்டார்மி டேனியல்ஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டார். இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை கிளப்பியது. ஆனால், இந்த குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார்.

தேர்தல் பிரசார சமயத்தில் ஆபாச நடிகை ஸ்டார்மி வெளியிட்ட தகவலால் டிரம்புக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து இவ்விவகாரத்தை ஸ்டார்மி பேசாமல் இருக்க அவருக்கு ரூ.1.07 கோடி டிரம்ப் மூலம் வழங்கப்பட்டது.

ஆனால் தொகை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று கணக்கில் காட்டப்பட்டது.

அமெரிக்காவை பொறுத்தவரை அமெரிக்காவில் பொய்யாக வணிக செலவை காட்டுவது சட்ட விரோதம் ஆகும். எனவே டிரம்ப் விசாரணை நடந்து வந்த நிலையில் அண்மையில் தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது. இதனால் டிரம்ப் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியானதால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வழக்கு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதி மன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் நேற்று (04) முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்  நீதிமன்றத்தில் ஆஜர் ஆனதை தொடர்ந்து டிரம்ப் கைது நியூயார்க் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்துளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...