16887236639622 scaled
உலகம்செய்திகள்

மனைவியின் மூளையை சமைத்து சாப்பிட்ட கணவன்

Share

மனைவியின் மூளையை சமைத்து சாப்பிட்ட கணவன்

பிசாசை வழிபடுவதாக கூறும் ஒருவர், தனது மனையை கொன்று, அவரது மூளையை சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் மூளையை சாப்பிட்ட கணவன்
மெக்சிகோவில் மிகக் கொடூரமான குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னைத்தானே ‘பிசாசு வழிபாடு செய்பவர்’ என்று முத்திரை குத்திக்கொண்ட அந்த நபர் , தனது மனைவியைக் கொன்று, அவரது மண்டை ஓட்டை சாம்பல் கிண்ணமாகவும் (ashtray), அவரது மூளையை Tacos உணவாகவும் சாப்பிட்டுள்ளார்.

அவர் குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்ததாகவும், மனைவியிடம் அடிக்கடி வன்முறையில் ஈடுபட்டதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறினர்.

அல்வாரோ (Alvaro) எனும் 32 வயதான அந்த நபர், ஜூலை 2 அன்று பியூப்லாவில் உள்ள தம்பதியரின் வீட்டில் கைது செய்யப்பட்டார்.

கட்டிடம் கட்டும் தொழிலாளியான அல்வாரோ, ஜூலை 29 அன்று, ஐந்து பிள்ளைகளுக்கு தாயான தனது மனைவி மரியா மான்செராட்டை (Maria Montserrat) கொலை செய்துள்ளார்.

கொலையைச் செய்யும்போது சட்டவிரோத போதைப்பொருட்களை பயன்படுத்தி போதையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணையின் போது, ​​குற்றத்தைச் செய்ய பிசாசு தனக்கு உத்தரவிட்டதாக அல்வாரோ அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

மனைவியைக் கொன்றுவிட்டு, அவரது உடல் உறுப்புகளை வெட்டி பிளாஸ்டிக் பையில் போட்டுள்ளார். சில பைகளை வீட்டின் பின்புறமுள்ள சிற்றோடையில் வீசியுள்ளார், ​​மீதியை வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்.

அல்வாரோ தனது மனைவியின் மூளையின் ஒரு பகுதியை டாக்கோஸில் வைத்து சாப்பிட்டதாகவும், உடைந்த மண்டை ஓட்டின் ஒரு பகுதியை சாம்பல் கிண்ணமாக பயன்படுத்தியதாகவும் ஒப்புக்கொண்டார்.

மனைவியைக் கொன்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் தனது வளர்ப்பு குழந்தைகளில் ஒருவரை அழைத்து குற்றத்தை ஒப்புக்கொண்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...