download 20 1 1
இந்தியாஉலகம்செய்திகள்

முத்தம் கொடுத்ததால் நீதிமன்றம் புதிய உத்தரவு!

Share

மேடையில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு நடிகர் ரிச்சர்டு கன்னத்திலும், கையிலும் முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஷில்பா ஷெட்டிக்கு முத்தம் கொடுத்த ரிச்சர்டு ஹிரி நிகழ்ச்சி மேடையில் நடிகை ஷில்பா நடிகர் ரிச்சர்டின் இந்த செயல் அருவருப்பாகவும், ஆபாசமாகவும் இருந்ததாக கூறி இந்திய கலாசாரத்தை அவமதித்து விட்டதாகவும் கூறி வலதுசாரி அமைப்புகள் ஷில்பா ஷெட்டிக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.

மேலும், ஷில்பா ஷெட்டி மற்றும் ரிச்சர்டு மீது ராஜஸ்தானில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், அந்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி  மும்பைக்கு மாற்றப்பட்டது.

ஷில்பா ஷெட்டி பொதுஇடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டதாக ரிச்சர்டு மற்றும் ஷில்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வந்த நிலையில் வழக்கில் இருந்து ரிச்சர்டு விடுவிக்கப்பட்டார்.

ஆனால், ஷில்பா ஷெட்டி மீது வழக்கு நடந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வழக்கில் இருந்து ஷில்பாவை விடுதலை செய்து மாஜிஸ்திரேட் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஷில்பா ரிச்சர்டு ஹிரியின் செயலால் பாதிக்கப்பட்டவர் அவர் எந்த குற்றசெயலையும் செய்யவில்லை என்று கூறி ஷில்பா ஷெட்டியை வழக்கில் இருந்து கோர்ட்டு விடுவித்து வழக்கையும் முடித்து வைத்தது.

இந்நிலையில், வழக்கில் இருந்து ஷில்பா ஷெட்டி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மும்பை கீழமை கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி, ஷில்பா ஷெட்டி வழக்கை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

1860814 sho

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
iraan us war
உலகம்

அமெரிக்காவிற்கு பதிலடி வழங்கிய ஈரான் – அமெரிக்க தளங்கள் இருக்கும் நாடுகள் மீது பலத்த தாக்குதல்.

  அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து, ஜோர்டான், குவைத் மற்றும் கத்தாரில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின்...

vijay sad
இந்தியா

முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுக பதிலடி !

கரூருக்கு சென்ற தமிழக முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்வில், திமுகவை குறித்து கடுமையான விமர்சனங்களினை...

water cut
உலகம்

பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய தண்ணீர் கட்டுப்பாடுகள்.

  பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும்...

friends drinking
இந்தியா

தமிழ் நாட்டில் மது அருந்தும் பெண்கள் இத்தனை பேரா?

  இந்திய மாநில அரசுகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக மது உள்ளதுடன், மதுபானங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை...