இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள தமிழ் இளைஞன் - கதறும் தாய்
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள தமிழ் இளைஞன் – கதறும் தாய்

Share

இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள தமிழ் இளைஞன் – கதறும் தாய்

அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞனை நாடு கடத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தாயுடன் வாழும் டிக்ஸ்டன் அருள்ரூபன் என்பவரே நாடு கடத்தலுக்கு முகங்கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தாயிடமிருந்து பிரிந்து அவரை நாடு கடத்தலை நிறுத்துமாறு அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் தமிழ் அகதிகள் பேரவை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. டிக்ஸ்டனின் 13 வயதில் அவரது தந்தை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் கொல்லப்பட்டார்.

இலங்கையில் இராணுவத்தின் பல்வேறு துன்புறுத்தலுக்கு முகங்கொடுத்த டிக்ஸ்டனின் தாய் ரீட்டா, கடந்த 2012ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா சென்றார்.

ரீட்டாவின் கோரிக்கைக்கு அமைய அவருக்கு புகலிடம் வழங்கப்பட்டது. இதன் காரணமாக தனது மகன் தன்னுடன் இணையும் நாள் வரும் என்ற அவரது நம்பிக்கையும் அதிகரித்தது.

2016 இல் டிக்ஸ்டனின் பேத்தியார் காலமானார் இதன் காரணமாக அவன் தனக்கு இருந்த ஒரேயொரு நெருங்கிய குடும்ப உறவையும் இழந்தான்.

ரீட்டா மகனை சட்டபூர்வமாக அவுஸ்திரேலியாவிற்கு அழைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார் அந்த விண்ணம் நிராகரிக்கப்பட்டது. எனினும் தனது தாயாருடன் சேர்வதற்காக டிக்ஸ்டன் 2019 இல் விமானம் மூலம் அவுஸ்திரேலியா சென்றார்.

எனினும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் குடிவரவு தடுப்புமுகாமில் தடுத்து வைத்தனர். தொடர்ந்தும் அவர் அங்கேயே உள்ளார். கடந்த வாரம் அவர் இலங்கைக்கு விரைவில் நாடு கடத்தப்படுவார் என அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

மிகவும் துன்பகரமான கடந்தகாலத்திலிருந்து மீண்டு மீண்டும் இணைவதற்கும் அமைதியான வாழ்வை வாழ்வதற்கும் தாயும் மகனும் பெருவிருப்பம் கொண்டுள்ளனர். ஆனால் தற்போதைய நிலை பெரும் துயரத்தையே ஏற்படுத்துகின்றது.

தாயாரும் மகனும் போதியவு துன்பங்களை அனுபவித்துள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீள உருவாக்க அனுமதிக்க வேண்டும் என அவுஸ்திரேலியாவின் தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.

டிக்ஸ்டனை நாடு கடத்தும் திட்டத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் கைவிடவேண்டும், அவரை முகாமிலிருந்து விடுதலை செய்து நிரந்தர பாதுகாப்பு விசாவை வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...