corona
உலகம்செய்திகள்

4 வைரஸ்கள் சேர்ந்த திரிபு! – சீனாவில் எகிறும் தொற்றாளர்கள்

Share

சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகமாகி கொண்டே இருக்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதாகவும், ஆயிரக்கணக்கானோர் பலியாகுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

கொரோனா எழுச்சிக்கு ஒமைக்ரானின் பி.எப்.7 என்ற வைரஸ் பரவல்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனாவில் நான்கு வைரஸ்கள் சேர்ந்ததால் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது என்று இந்தியாவின் மத்திய கொரோனா தடுப்பு குழு தலைவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- சீனாவில் பி.எப்.7 வைரசால் பாதிக்கப்படுபவர்கள் 15 சதவீதமாக உள்ளனர். 50 சதவீதம் பேர் பி.என். மற்றும் பி.க்யூ வரிசை ஆகியவற்றாலும், 10 முதல் 15 சதவீதம் பேர் எஸ்.வி.வி. மாறுபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள். 4 வைரஸ்கள் சேர்ந்ததால் சீனாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

சீனாவில் கொரோனா அதிகரித்தாலும் இந்தியாவில் பீதியடைய தேவையில்லை. இங்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி, தடுப்பூசிகள், பரவலான நோய் தொற்றின் மூலம் பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றால் இந்தியா பலன் அடைந்துள்ளது.

சீனாவில் மக்கள் பெற்ற தடுப்பூசியின் செயல் திறன் குறைவாக இருக்கும். அவர்களில் பெரும்பாலானோர் மூன்று முதல் நான்கு டோஸ்களை பெற்றுள்ளனர். 97 சதவீத இந்தியர்கள் இரண்டு டோஸ் செலுத்தி கொண்டுள்ளனர். தடுப்பூசி போடும் போது மக்கள் வெளிப்படுத்திய ஆர்வம் நாம் மிகவும் பாதுகாப்பான சமூகத்தில் இருப்பதை காட்டுகிறது – என்றார்.

#world #corona #India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 1
இலங்கைசெய்திகள்

ஐஸ் போதை பொருள் கடத்தலில் ஜே.வி.பிக்கும் தொடர்பு! அதிர்ச்சி கொடுத்த விமல் வீரவன்ச

தென்பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும்தொகை போதை பெருட்கள் கடத்தலில் தொடர்புடையவர் என கூறப்படும் சனத் வீரசிங்க...

17 1
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி அதிரடி கைது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் அதிரடியாக கைது...

16 1
இலங்கைசெய்திகள்

ஜே.பி.விக்கு நீதி.. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அநீதி..! கேள்வி எழுப்பிய அர்ச்சுனா

அரசாங்கத்திற்கு எதிராக போரிட்ட இரண்டு குழுக்களில் ஒரு குழுவுக்கு மட்டும் ஏன் அநீதி இழைக்கப்பட்டது.ஜே.பி.வியை தடைசெய்தார்கள்....

15 1
இந்தியாசெய்திகள்

த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படலாம்! வெளியான தகவல்

கரூர் பிரசார கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருந்ததா? என அவரது பாதுகாப்பு...