NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

Share

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர் கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களுடனான தொடர்பு மற்றும் ஏனைய சில நிதி விவகாரங்கள் குறித்த விசாரணைகளுக்காக அவர் ஏற்கனவே சிஐடி-யினால் அழைக்கப்பட்டிருந்தார்.

முந்தைய அழைப்பாணையின்போது அவர் வெளிநாட்டிற்குச் சென்றிருந்ததால், விசாரணையில் கலந்துகொள்ள முடியவில்லை. இதனையடுத்தே அவரது கோரிக்கைக்கு அமைய, இன்று (03) செவ்வாய்க்கிழமை புதிய திகதி வழங்கப்பட்டிருந்தது.

தற்போது அவரிடம் சிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், இது தொடர்பான மேலதிக தகவல்கள் விசாரணை முடிவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
கொத்மலை
இலங்கை

திறக்கப்பட்ட கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

இன்றைய தினம் மாலை 7.00 மணிக்கு, கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை...

mon
இலங்கை

5,000 மில்லியன் டொலர்களைக் கடந்த வெளிநாட்டு ஊழியர்களின் பணப்பரிமாற்றம்!

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள மொத்த...

veppam
இலங்கை

வெப்பமான வானிலையானது மேலும் அதிகரிக்கலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பின்படி, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த...

hr d
இலங்கை

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ள அதிகாரிகள்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறைச்சாலைகள் சார்ந்த பகுதிகளில் பதிவான பதற்றமான சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக,...