‘மணிகே மகே ஹிதே’ பாடலின் மூலம் உலகளவில் பிரபலமான இலங்கைப்பாடகி யொஹானிக்கு மிகப் பெரிய வாய்ப்பு அமைந்துள்ளது .
முதன்முதலாக இவர் ஒரு பாலிவுட் திரைப்படத்தில் பாடல் பாடுவதற்குரிய வாய்ப்பினை பெற்றுள்ளார் .
ஹிந்தி திரையுலகில் ‘ஷிட்டாட்’ (Shiddat) எனும் பாலிவுட் படத்தின் தீம் பாடலை யொஹானி பாடியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை தேஷ்முக் இயக்கியுள்ளார்.
இந்திய பாடகர் மனன் பரத்வாஜ் இப் படத்தின் பின்னணி பாடகராகவுள்ள அதேவேளை இந்திய அதிகாரப்பூர்வ பின்னணி பாடகியாக யொஹானி பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment