உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த 8 மாதங்களாக போர் இடம்பெற்றுவரும் நிலையில், ரஷ்யப்படைகள் கைப்பற்றிய டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதாக அந்நாட்டு அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஐ.நா.பொதுச் சபையில் நேற்று ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் வாக்களித்தன. இலங்கை, இந்தியா உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.
#world
Leave a comment