tamilnig 1 scaled
உலகம்செய்திகள்

தாய்வான் புதிய ஜனாதிபதியாக லாய் சிங் தே: சீனா ஆதிக்கத்துக்கு அச்சுறுத்தல்

Share

தாய்வான் புதிய ஜனாதிபதியாக லாய் சிங் தே அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தாய்வானில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெற்றது.

இதில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

இத் தேர்தலில் அந்நாட்டின் ஆட்சியில் உள்ள ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் லாய் சிங் தே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினார்.

அவரை எதிர்த்து சீனா ஆதரவு பெற்ற தேசியவாத கட்சியை சேர்ந்த ஹவ் யொ-ஹி ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினார்.

வாக்குப்பதிவு இன்று (13.1.2023) மாலை 4 மணிக்கு நிறைவடைந்த நிலையில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது

இதையடுத்து, லாய் சிங் தே தாய்வானின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கிழக்கு ஆசியாவில் பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு தாய்வான். சீனாவுக்கு அருகே அமைந்துள்ள இந்நாட்டை தனிநாடாக சீனா அங்கிகரிக்கவில்லை.

மேலும், தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்றும் சீனா கூறி வருகிறது.

தாய்வானின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லாய் சிங் தே சீன எதிர்ப்பு கொள்கை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...