tamilni 113 scaled
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை நிராகரித்த இஸ்ரேல் பிரதமர்

Share

போர் நிறுத்தத்தை நிராகரித்த இஸ்ரேல் பிரதமர்

ஹமாஸ் அமைப்புடனான நடைபெற்று வரும் போரை எக்காரணம் கொண்டும் நிறுத்த முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

அத்துடன் ஹமாஸ் அமைப்பு பணயக் கைதிகளை விடுவிக்கப்படும் வரை காசாவிற்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காசா எல்லையில் சில நாட்களில் மாத்திரம் 241 பேர் பலியாகியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10, 569 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் இறந்தவர்களில் 4,324 குழந்தைகளும் அடங்கியுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் நிறுத்தம் செய்ய முடியாது என அறிவித்துள்ளமை உலக மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கலந்துரையாடலில் மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்தம் செய்ய அமெரிக்கா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

குறித்த தகவலை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

போர் நிறுத்தம் தொடர்பில் உலகின் பல பாகங்களிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையில் இஸ்ரோல் அதனை நிராகரித்து வருகின்றது.

அத்துடன் ஹமாஸ் இயக்கத்தை அழிக்கும் வரை போர் நிறுத்தப்பட மாட்டாது என இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெத்தன்யாகு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

காசாவில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வரை காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் பின்பற்ற வேண்டும் என ஜோபைடன் இஸ்ரேல் பிரதமரிடம் வலியுறுத்தினார்.

மேலும் இரு தலைவர்களும் ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளை மீட்பது குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.

பிணைக் கைதிகளாக இருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறும், காசாவிற்கு செல்லும் மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்பட்டதை வரவேற்பதாகவும் ஜோபைடன் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையே ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதுடன் காயமுற்றவர்கள் மருத்துவ வசதிகளின்றி அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் உணவு மருந்து நீர் மற்றும் மின்சாரம் ஆகியன காசாவில் தடைப்பட்டுள்ள நிலையில் போரில் அப்பாவி குழந்தைகள், பொதுமக்கள் பலியாகி வருவதாக ஜக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

போரை நிறுத்தக்கோரி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கலந்துரையாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...

us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...