ezgif 4 5303db2e00
இந்தியாஉலகம்செய்திகள்

உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்தியா விளங்குகிறது – ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர்

Share

ஜெர்மனி ஜி7 நாடுகள் குழுவின் தலைமைப் பொறுப்பேற்ற பின், இந்தியாவிற்கு வருகை தருவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை மந்திரி அன்னாலெனா பேர்பாக் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அன்னாலெனா பேர்பாக் கூறியதாவது:

ஜெர்மனி ஜி7 நாடுகள் குழுவின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் கடைசி மாதங்களில் நான் இந்தியாவிற்கு வருகை தருகிறேன். ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்ற சில நாட்களில் இந்த பயணம் அமையவுள்ளது.

இந்திய பயணத்தின்போது தற்போதைய சூழலில் அவசர கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களான காலநிலை நெருக்கடி மற்றும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கைப் பராமரித்தல் ஆகியவை குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும்.

வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாகவும், உறுதியான ஜனநாயகமாகவும் உள்ள இந்தியா அனைத்து உள் சமூக சவால்கள் இருந்தபோதிலும் உலகின் பல நாடுகளுக்கு முன்மாதிரியாகவும் பாலமாகவும் உள்ளது.

உக்ரைனில் ரஷிய ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக ஜி20 உள்ளது, இறுதியில் இந்தியாவிற்கும் நன்றி. இந்தியா ஜெர்மனியின் கூட்டணி நாடாக உள்ளது என தெரிவித்தார்.

#India #world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...