tamilnirr 1 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

இந்திய வீரர்களை வெளியேற்ற மாலைதீவு ஜனாதிபதி காலக்கெடு

Share

இந்தியா தனது இராணுவ வீரர்களை மாலைத்தீவில் இருந்து விலக்கிக்கொள்ள அந்த நாட்டின் ஜனாதிபதி முகமது முய்ஸு காலக்கெடு விதித்துள்ளார்.

இதன்படி தனது நாட்டிலிருந்து இந்திய படையினர் 2024 மார்ச் 15க்கு முன்னர் வெளியேறவேண்டும் என்று முகமது முய்ஸு காலக்கெடு விதித்துள்ளார்.

சீனாவுக்கு தனது முதல் அரசு பயணத்தை மேற்கொண்டு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்த சில நாட்களுக்குப் பின்னர் இந்த காலக்கெடுவை மாலைதீவு ஜனாதிபதி விதித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி இந்தியா தனது இராணுவ வீரர்களை திரும்பப் பெறுமாறு ஜனாதிபதி முய்ஸ முறைப்படி கேட்டுக் கொண்டதாக மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுக் கொள்கை செயலாளரான அப்துல்லா நஜிம் இப்ராஹிம் கூறியுள்ளார்.

இந்திய இராணுவ வீரர்கள் மாலைத்தீவில் தங்க முடியாது. இது அரச தலைவர் முகமது முய்சுவின் கொள்கை மற்றும் இந்த நிர்வாகத்தின் கொள்கை என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக மாலைதீவும் இந்தியாவும் படைகளை திரும்பப் பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உயர்மட்ட மையக் குழுவை அமைத்துள்ளன.

இந்த குழு தனது முதல் கூட்டத்தை இன்று காலை மாலேயில் உள்ள வெளியுறவு அமைச்சக தலைமையகத்தில் நடத்தியது.

இதனையடுத்தே இந்திய படையினரை விலக்கிக்கொள்ளும் காலக்கெடு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
தர்மேந்திர பிரதான்
இந்தியா

பதவி விலகினார் கல்வி அமைச்சர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பதவி...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...

உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...