coronaa
உலகம்செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு!

Share

தாய்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

உலகையே உலுக்கிய கொரோனாத் தொற்றானது தற்போது குறைவடைந்து வருகிறது. சில நாடுகளில் அடுத்த அலை தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

இருப்பினும் பெரும்பாலான நாடுகள் அனைத்தும் கொரோனாத் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ள நிலையில், தமது நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன.

இந்த நிலையில், தற்போது தாய்லாந்தும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது. இதன்படி தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இனி கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் கொரோனாத் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை முழுமையாக பெற்ற வெளிநாட்டவர்கள், தாய்லாந்துக்கு வருகை தரும்போது அவர்கள், எவ்வித சோதனைக்கும் உட்படுத்தப்படமாட்டார்கள். அதேவேளை தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

fake doctor
உலகம்

15 மரணங்களுக்கும் நானே காரணம் – அதிர வைக்கும் போலி மருத்துவரின் பின்னணி!

ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 15 நோயாளிகளின்...

Israel Iran
உலகம்

ஈரான் பணியும்வரை தாக்குதல் தொடரும் – அமெரிக்காவின் அதிரடி

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக அமெரிக்க...